Karna's Death Scene in Villibharatham
போரை நிறுத்துமாறு கண்ணன் விசயனுக்குக் கூறி, வேதியர் வடிவு கொண்டு
Kṛṣṇa tells Arjuna to stop the battle and, taking the form of a Brāhmaṇa, approaches Karṇa.
கன்னனை அடைதல்
எத் தலங்களினும் ஈகையால், ஓகை
வாகையால், எதிர் இலா வீரன்,
மெய்த்தலம் முழுதும் திறந்து உகு குருதி
வெயிலவன் கரங்கள்போல் விரிய,
கொத்து அலர் அலங்கல் மகுடமும் கவச
குண்டலங்களும் உருக் குலைந்தும்,
கைத்தலம் மறந்தது இல்லை—விற் குனிப்பும்,
கடுங் கணை தொடுத்திடும் கணக்கும். 236
அத்த வெற்பு இரண்டு விற்கிடை எனப் போய்
ஆதவன் சாய்தல் கண்டருளி,
முத்தருக்கு எல்லாம் மூலமாய், வேத
முதல் கொழுந்து ஆகிய முகுந்தன்,
சித்திரச் சிலைக் கை விசயனை, “செரு நீ
ஓழிக!” எனத் தேர்மிசை நிறுத்தி,
மெய்த் தவப் படி.வ வேதியன் ஆகி,
வெயிலவன் புதல்வனை அடைந்தான்.
வேதியன், “இயைந்தது ஒன்று அளி” எனலும், சுன்னன், “தரத்தகு பொருளை நீ
சொல்லுக!” என்ன, வேதியன் அவனது புண்ணியத்தை உதவ வேண்டுதலும்
“தாண்டிய தரங்கக் கருங் கடல் உடுத்த
தரணியில் தளர்ந்தவர்தமக்கு
வேண்டிய தருதி நீ எனக் கேட்டேன்;
மேருவினிடைத் தவம் பூண்டேன்;
ஈண்டிய வறுமைப் பெருந் துயர் உழந்தேன்;
இயைந்தது ஒன்று இக் கணத்து அளிப்பாய்!
தூண்டிய கவனத் துரகதத் தடந் தேர்ச்
சுடர் தரத் தோன்றிய தோன்றால்!” 238
என்று கொண்டு, அந்த அந்தணன் உரைப்ப,
இரு செவிக்கு அமுது எனக் கேட்டு,
வென்றி கொள் விசயன் விசய வெங் கணையால்
மெய் தளர்ந்து இரதமேல் விழுவோன்,
“நன்று!” என நகைத்து, “தரத் தகு பொருள்
நீ நவில்க!” என, நான் மறையவனும்,
“ஒன்றியபடி நின் புண்ணியம் அனைத்தும்
உதவுக!” என்றலும், உளம் மகிழ்ந்தான்.
கன்னன் மழ்ந்து, கான் செய் புண்ணியம் அனைத்தையும் நீர் வார்த்துக் கொடுத்தல்
“அவியோ நிலையின் கலங்கியது; யாக்கை
அகத்ததோ? புறத்ததோ? அறியேன்;
பாவியேன் வேண்டும் பொருள் எலாம் நயக்கும்
பக்குவம் கன்னில் வத்திலையால்;
ஓவு இலாது யான் செய் புண்ணியம் அனைத்தும்
உதவினேன்; கொள்க நீ! உனக்குப்
பூவில் வாழ் அயனும் நிகர் அலன் என்றால்,
புண்ணியம் இதனினும் பெரிதோ?” 240
என்ன முன் மொழிந்து, கரம் குவித்து இறைஞ்ச,
இறைஞ்சலர்க்கு எழிலி ஏறு அனையான்,
கன்னனை உவகைக் கருத்தினால் நோக்கி,
“சைப் புனலுடன் தருக” என்ன,
அன்னவன் இதயத்து அம்பின்வாய் அம்பால்
அளித்தலும், அங்கையால் ஏற்றான்—
முன்னம் ஓர் அவுணன் செங் கை நீர் ஏற்று
மூஉலகமும் உடன் சுவர்ந்தோன்.
“வேண்டும் வரம் கேள்” என முனிவன் கன்னனுக்குக் கூறுதலும், அவன்,
“எப்பிறப்பினும் இல்லை என்போர்க்கு மறுத்து உரையா இதயம் அளி” என்றலும்
மல்லல் அம் தொடையல் நிருபனை முனிவன்
மகிழ்ந்து, “நீ வேண்டிய வரங்கள்
சொல்லுக; உனக்குத் தருதும்!” என்று உரைப்ப,
சூரன் மா மதலையும் சொல்வான்:
“அல்லல் வெவ் வினையால் இன்னம் உற்பவம் உண்டாயினும்,
ஏழ் எழு பிறப்பும்,
‘இல்லை’ என்று இரப்போர்க்கு ‘இல்லை’ என்று உரையா
இதயம் நீ அளித்தருள்!” என்றான். 242
கன்னன் வேண்டிய வரம் அளித்து,
முத்தியும் பெறுவாய் என்று முனிவன் உரைத்தல்,
மைத்துனன் உரைத்த வாய்மை கேட்டு, ஐயன்,
மன மலர் உகந்து உகந்து, அவனைக்
கைத்தல மலரால் மார்புறத் தழுவி,
கண் மலர்க் கருணை நீர் ஆட்டி,
“எத்தனை பிறவி எடுக்கினும், அவற்றுள்
ஈகையும் செல்வமும் எய்தி,
முத்தியும் பெறுதி முடிவில்” என்று உரைத்தான்—
மூவரும் ஒருவனாம் மூர்த்தி.
and in the end, you shall attain liberation”—
said the Murti who is One though appearing as Three.
Comments
Post a Comment