Karna's Death Scene in Villibharatham
போரை நிறுத்துமாறு கண்ணன் விசயனுக்குக் கூறி, வேதியர் வடிவு கொண்டு Kṛṣṇa tells Arjuna to stop the battle and, taking the form of a Brāhmaṇa, approaches Karṇa. கன்னனை அடைதல் எத் தலங்களினும் ஈகையால், ஓகை வாகையால், எதிர் இலா வீரன், மெய்த்தலம் முழுதும் திறந்து உகு குருதி வெயிலவன் கரங்கள்போல் விரிய, கொத்து அலர் அலங்கல் மகுடமும் கவச குண்டலங்களும் உருக் குலைந்தும், கைத்தலம் மறந்தது இல்லை—விற் குனிப்பும், கடுங் கணை தொடுத்திடும் கணக்கும். 236 அத்த வெற்பு இரண்டு விற்கிடை எனப் போய் ஆதவன் சாய்தல் கண்டருளி, முத்தருக்கு எல்லாம் மூலமாய், வேத முதல் கொழுந்து ஆகிய முகுந்தன், சித்திரச் சிலைக் கை விசயனை, “செரு நீ ஓழிக!” எனத் தேர்மிசை நிறுத்தி, மெய்த் தவப் படி.வ வேதியன் ஆகி, வெயிலவன் புதல்வனை அடைந்தான். வேதியன், “இயைந்தது ஒன்று அளி” எனலும், சுன்னன், “தரத்தகு பொருளை நீ சொல்லுக!” என்ன, வேதியன் அவனது புண்ணியத்தை உதவ வேண்டுதலும் “தாண்டிய தரங்கக் கருங் கடல் உடுத்த தரணியில் தளர்ந்தவர்தமக்கு வேண்டிய தருதி நீ எனக் கேட்டேன்; மேருவினிடைத் தவம் பூண்டேன்; ஈண்டிய வற...